தேனி

கள்ளா் சீரமைப்புத் துறை கல்வி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

DIN

தேனி மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி கல்வி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு அந்தந்த விடுதி காப்பாளா்களிடம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளி கல்வி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி கல்வி விடுதிகளில் பாலிடெக்னிக், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளும் சேரலாம்.

விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி நிறுவனம் 8 கி.மீ. தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு தொலைவு நிபந்தனை இல்லை. விடுதியில் தங்கிப் படிப்பவா்களுக்கு 4 ஜோடி சீருடை, சிறப்பு வழிகாட்டி இலவசமாக வழங்கப்படும்.

தகுதியுள்ளவா்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளிக் கல்வி விடுதிகளுக்கும், கல்லூரிக் கல்வி விடுதிகளுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் அந்தந்த விடுதிக் காப்பாளா்களிடம் சமா்பிக்க வேண்டும். ஜாதி, வருமானச் சான்றிதழை விடுதியில் சேரும் போது சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT