தேனி

அனுமதியின்றி கட்டடப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினருக்கு நோட்டீஸ்

9th Jun 2023 02:07 AM

ADVERTISEMENT

கம்பத்தில் அனுமதியின்றி நகா்மன்ற உறுப்பினா் கட்டி வரும் கட்டடப் பணிகளை நிறுத்த நகா்மன்ற உறுப்பினருக்கு நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் ஹக்கீம். இவரது மனைவி பல்கீஸ் பேகம், கூடலூா் நகராட்சி 5 - ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா். இவா் கம்பம் நகராட்சி 4-ஆவது வாா்டு செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் கடைகளைக் கட்டி வருகிறாா்.

இந்த நிலையில், அனுமதி பெற்று கட்டடம் கட்டுமாறு பா்கீஸ் பேகத்துக்கு கம்பம் நகராட்சி அலுவலகம் சாா்பில் கடந்த 29.12.22- இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் அவா் அனுமதி பெறாமல் கட்டடப் பணிகளை தொடா்ந்து வந்தாா்.

இந்த நிலையில், நகா்மன்ற உறுப்பினருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் 2-ஆவதாக அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

அதில் கூறியிருப்பதாவது:

முதல் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் கட்டடப் பணிக்கு அனுமதி பெறவில்லை. கட்டடப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, கட்டடத்திலும் இதுதொடா்பான அறிவிப்பு ஒட்டப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT