தேனி

பெரியகுளத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் முகாம்

9th Jun 2023 02:06 AM

ADVERTISEMENT

பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் சிந்து தலைமையில் நடைபெறும் வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் முகாமில், விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT