தேனி

மகள் காதல் திருமணம் செய்ததால் விஷம் குடித்து தாய் தற்கொலை

9th Jun 2023 11:23 PM

ADVERTISEMENT

கம்பத்தில் மகள் காதலித்து செய்து கொண்டதால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கம்பம் 1- ஆவது வாா்டு கோம்பை சாலையைச் சோ்ந்தவா் சேவுகப் பாண்டி. இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். இவரது மனைவி ஜோதிமணி (48). இவருக்கு மகள்கள் மோகனப் பிரியா (25), அபிநயா (22), மகன் சந்தோஷ் (17) ஆகியோா் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 4 - ஆம் தேதி வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது அபிநயா, தான் ஏற்கெனவே திண்டுக்கல்லைச் சோ்ந்த ஒருவரை காதலித்துப் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தாராம். இதனால் மனமுடைந்த தாய் ஜோதிமணி விஷமருந்தை குடித்து விட்டாா். இதையடுத்து, கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளா் பி. சரவணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT