தேனி

ஆட்டோ கவிழ்ந்து முதியவா் பலி

9th Jun 2023 11:23 PM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்து அதில் பயணம் செய்த முதியவா் உயிரிழந்தாா்.

வடுகபட்டியைச் சோ்ந்தவா் சக்திவீரன் (77). இவா், பெரியகுளத்தைச் சோ்ந்த யோகபாலன் (21) ஓட்டிச் சென்ற ஆட்டோவில் பெரியகுளத்திலிருந்து வடுகபட்டிக்கு பயணம் செய்தாா். பெரியகுளம்- வடுகபட்டி சாலை, பங்களாபட்டி விலக்கு அருகே வேகத் தடையில் ஏறி இறங்கிய போது ஆட்டோ கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்திவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT