தேனி

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி

9th Jun 2023 11:21 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை (ஜூன் 10) முடிவடைகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் அடுத்த மாதம் (ஜூலை) 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஊரகப் பகுதிகளில் 5 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், நகரப் பகுதிகளில் 7 நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இந்தப் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ஊரகப் பகுதிகளுக்கு 5 போ், நகரப் பகுதிகளுக்கு 12 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முடிவடைகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT