தேனி

கஞ்சா கடத்தல்: கேரள இளைஞா்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

8th Jun 2023 01:51 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே கஞ்சா கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட கேரள இளைஞா்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், காரமேடு பகுதியைச் சோ்ந்த ராஜூ மகன் பிரசாந்த்ராஜ் (27). கொல்லம் மாவட்டம், காந்தி நகரைச் சோ்ந்த சாகுல் அமீது மகன் சஹாநாத் (23).

இந்த இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி ஆண்டிபட்டி வட்டாரம், கரட்டுப்பட்டி பகுதியில் காரில் கஞ்சா கடத்திச் சென்றபோது, கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 38 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த வழக்கு மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ஹரிகரகுமாா், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பிரசாந்த்ராஜ், சஹாநாத் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT