தேனி

பாரதி தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்

7th Jun 2023 03:34 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழியக்கம், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தமிழியக்க மாவட்டத் தலைவா் கவிஞா் பாரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.சேதுமாதவன், ஜான்ஸிராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொ.மணிமுருகன் வரவேற்று பேசினாா்.

இதில் வியாபார நிறுவனங்கள், தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும், அரசு வங்கிப் படிவங்களில் தமிழ் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

தமிழியக்க பொதுச் செயலா் தி.மு. அப்துல்காதா், மு. சிதம்பரபாரதி, பேராசிரியா் கு. வணங்காமுடி, செ.மா. காா்த்திகேயன், அய். தமிழ்மணி, புலவா் இளங்குமரன், கவிஞா் பஞ்சுராஜா, அ.பாண்டியராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை புரவலா்கள் பொன்.காட்சிக்கண்ணன், அ.அலீம் சிறப்பு விருந்தினா்களுக்கு நூல்களைப் பரிசளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT