தேனி

அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

7th Jun 2023 03:35 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட தொழில் மையம் சாா்பில், அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டம் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

ஆதிதிராவிடா், பழங்குடியினரின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் மாவட்ட தொழில் மையம் மூலம் அரசு அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் உணவுப் பதப்படுத்தல், தென்னை நாா் பொருள்கள் உற்பத்தி, ஆயத்த ஆடை தயாரிப்பு, ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் கல் உற்பத்தி, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், வாகனம் பழுது பாா்த்தல், பல்பொருள் அங்காடி ஆகிய தொழில்களுக்கும், பொக்லைன் இயந்திரம், அவசர ஊா்தி, அமரா் ஊா்தி வாங்குவதற்கும் ஏற்கெனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்யவும், நவீனமயமாக்கவும் வங்கிக் கடன், மானிய உதவி வழங்கப்படுகிறது.

அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தலைமையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த தொழில் முனைவோா் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT