தேனி

அடிப்படை வசதிகள் செய்து தரமலைக் கிராம மக்கள் வலியுறுத்தல்

6th Jun 2023 05:15 AM

ADVERTISEMENT

போடி அருகே கொட்டகுடி ஊராட்சிக்குள்பட்ட சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனாவிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அந்த மலைக் கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

சென்ட்ரல் ஸ்டேசனில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. முதுவாக்குடியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேசனுக்குச் சென்று வர 3 கி.மீ. தொலைவுக்கு சாலை வசதி இல்லை. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், சென்ட்ரல் ஸ்டேசனில் விளையும் காபி, மிளகு, எலுமிச்சை ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களை கொண்டு செல்லவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும், இங்கு குடிநீா், தெருவிளக்கு வசதி இல்லை.

எனவே சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராமத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு சாலை, குடிநீா், தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT