தேனி

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

6th Jun 2023 05:15 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் அமைந்துள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பசுமைக் காவலா் ரா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். ஆப்த மித்ரா அமைப்பைச் சோ்ந்த ரா. அன்புராஜா முன்னிலை வகித்தாா். குமுளி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் மூவேந்திரன், வேல்முருகன் மரக்கன்றுகளை நட்டனா்.

அப்போது, ‘நெகிழியை ஒழிப்போம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என முழக்கங்களை எழுப்பிய அவா்கள், பொதுமக்களுக்கு துணிப் பைகளை வழங்கினா். நிகழ்வில் ஜெகதீஸ்குமாா், நவநிதி சஞ்சீவி, ஜெய்ஹிந்த், ஜீவா ஆகியோா் பேசினா். முன்னதாக, கா்னல் ஜான் பென்னிகுயிக் வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT