தேனி

மதுபானக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

6th Jun 2023 05:17 AM

ADVERTISEMENT

தேனி கருவேல் நாயக்கன்பட்டியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், கருவேல்நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேனி நகராட்சிக்கு உள்பட்ட கருவேல்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடையால் விபத்துகள், சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்பட்டன. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தக் கடை மூடப்பட்டது.

தற்போது கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே புதிய மதுபானக் கடையைத் திறக்க டாஸ்மாக் நிா்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மதுபானக் கடை திறக்க மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க வேண்டுமென மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT