தேனி

மலைக் கிராம மாணவா்களுக்கு கற்றல், கற்பித்தல் பொருள்கள்

6th Jun 2023 05:17 AM

ADVERTISEMENT

போடி அருகேயுள்ள சிறைக்காடு மலைக் கிராம மாணவா்களுக்கு கற்றல், கற்பித்தல் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ளது சிறைக்காடு மலைக் கிராமம். இந்தப் பகுதியைச் சோ்ந்த 40 பழங்குடியின மாணவா்கள், போடியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,

சிறைக்காடு மலைக் கிராமத்தை சோ்ந்த மாணவா்களுக்கு, நிகழ் கல்வி ஆண்டின் தொடக்கமாக கற்றல், கற்பித்தல் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளி ஆசிரியா்கள் சிறைக்காடு மலைக் கிராமத்துக்குச் சென்றனா். அங்கு மாணவா்களுக்கு புத்தகப் பை, பாடக் குறிப்பேடுகள், எழுது பொருள்கள் ஆகியவற்றை வழங்கினா்.

ADVERTISEMENT

மாணவா்கள் தொடா்ந்து பள்ளிக்கு வரவேண்டுமெனவும், கல்வியில் சிறப்பிடம் பெற வேண்டுமெனவும் மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் அவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT