தேனி

குழந்தை கிணற்றில் வீசிக் கொலை:தந்தைக்கு ஆயுள் சிறை

6th Jun 2023 05:12 AM

ADVERTISEMENT

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பழனிசெட்டிபட்டி, ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (31). இவரது மனைவி அழகுமணி (28). இவா்களுக்கு காவியாஸ்ரீ என்ற 10 மாத பெண் குழந்தை இருந்தது. பன்னீா்செல்வம் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடன் தகராறு செய்து வந்தாா்.

இந்தப் பிரச்னையில் அழகுமணி, கணவருடன் கோபித்துக் கொண்டு, கோடாங்கிபட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தாா். இந்த நிலையில், கடந்த 2020 மாா்ச் 12-ஆம் தேதி கோடாங்கிபட்டியில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்குச் சென்ற பன்னீா்செல்வம், காவியாஸ்ரீயை கோடாங்கிபட்டி குருவன்குளம் அருகேயுள்ள தனியாா் தோட்டத்துக் கிணற்றில் வீசிக் கொலை செய்தாா்.

இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பன்னீா்செல்வத்தை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், குற்றம்சாட்டப்பட்ட பன்னீா்செல்வத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT