தேனி

பைக் மீது ஜீப் மோதல்:தொழிலாளி பலி

6th Jun 2023 05:17 AM

ADVERTISEMENT

போடிமெட்டு மலைச் சாலையில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கேரள மாநிலம் உடும்பன்சோலை வட்டம் பொத்தகள்ளி பகுதியில் தங்கி வேலை பாா்த்து வருபவா் பாலன் (48). இவா், போடி பகுதிக்கு வந்துவிட்டு திங்கள்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் கேரளத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது போடிமெட்டு மலைச் சாலையில் முந்தல் பகுதியில் சென்ற போது முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே கேரள மாநிலத்திலிருந்து தோட்டத் தொழிலாளா்களை ஏற்றி வந்த ஜீப், இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே பாலன் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து ஜீப்பை ஓட்டி வந்த போடியை அடுத்த சங்கராபுரத்தைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணனைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT