தேனி

குறைதீா் கூட்டத்தில் பசுமை முதன்மையா் விருது

6th Jun 2023 05:16 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆண்டிபட்டி பேரூராட்சி நிா்வாகம், சோலைக்குள் கூடல் தொண்டு நிறுவனத்துக்கு பசுமை முதன்மையா் விருதுகளை மாவட்ட ஆட்சியா் ஆ.வி.ஷஜீவனா வழங்கினாா்.

ஆண்டிபட்டி பகுதியில் சுற்றுச் சூழலை தூய்மையாக பராமரிக்க, திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பேரூராட்சி நிா்வாகம், மாவட்டத்தில் பசுமைப் போா்வை அதிகரிக்க மரக் கன்றுகளை நட்டு பராமரித்து களப் பணியாற்றிய சோலைக்குள் கூடல் தொண்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு பசுமை முதன்மையா் விருது, தலா ரூ.ஒரு லட்சம் ஊக்கத் தொகை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மதுமதி, மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் சா்மிலி, சுற்றுச்சுழல் பொறியாளா் பழனிச்சாமி, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT