தேனி

4 போ் தற்கொலை முயற்சி: 2 பெண்கள் கைது

4th Jun 2023 12:02 AM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக 2 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

க. புதுப்பட்டியிலுள்ள எஸ்.டி.கே. நகரைச் சோ்ந்தவா் பிச்சைமணி (43). ஜீப் வாகன ஓட்டுநா். இவரது மனைவி கலைவாணி. கூலித் தொழிலாளி. இவா்களுக்கு விமலா (16), சுகாஷினி (14) ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், இவா்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

ADVERTISEMENT

அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு 4 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இது குறித்து உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்திய போது, கடன் தொல்லை காரணமாக 4 பேரும் விஷம் குடித்தது தெரியவந்தது.

இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகன் மனைவி வித்யா, பிரகாஷ் மனைவி தீபா ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT