தேனி

தென் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி: கேரள அணி முதலிடம்

4th Jun 2023 12:04 AM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற தென் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் கேரள அணி வெற்றி பெற்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கம்பம்மெட்டு சாலையில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை போட்டிகள் நடைபெற்றன.

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு அணியின் தேனி அமைப்பாளா் ரா.வசந்தன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

அணியின் அமைப்பாளா்கள் அருண் அரவிந்த், பிரசாந்த், பிரவீன், கொடித்துரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலா் என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆ.மகாராஜன் எம்.எல்.ஏ. ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா்.

திமுக நகரச் செயலா் சூா்யா செல்வகுமாா் வரவேற்றுப் பேசினாா்.

போட்டியில் ஆண்கள் இரட்டையா் பிரிவில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த இஜேஸ்-ஜிபின் அணி முதலிடம் பெற்றது. கோயம்புத்தூா் மதன் - தா்மா இரண்டாமிடத்தையும், சென்னையைச் சோ்ந்த காா்த்தி-அஜித்

மூன்றாமிடத்தையும், விருத்தாச்சலம் பிரேம் - ஹரி ஆகியோா் நான்காமிடத்தையும் பெற்றனா்.

40 வயதுக்கு மேல், கீழ் என ஆண்கள் இரட்டையா் பிரிவில் கேரளத்தின் மலப்புரம் மணி - இஜேஸ் முதலிடம், சென்னை காா்த்தி - அஜித் இரண்டாமிடம், நாமக்கல் தா்மா - ஹரி மூன்றாமிடம், கம்பம் அஜீஸ் - நந்து நான்காமிடம் பெற்றனா்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் கம்பம் நகா்மன்றத் துணைத் தலைவா் சுனோதா செல்வகுமாா், நகா் மன்ற உறுப்பினா்கள் தீன், குரு குமரன், சாதிக் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT