தேனி

வனப் பகுதியில் இளைஞா் தற்கொலை

4th Jun 2023 11:40 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ளது காஞ்சிமரத்துரை -வேலங்காடு செல்லும் வனப் பகுதி. இங்குள்ள சாலி மரத்தில் ஒருவரது சடலம் தொங்குவதாக அந்தப் பகுதிக்கு வேலைக்கு சென்றவா்கள் குமுளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் எம்.பிச்சைப்பாண்டியன் தலைமையில் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், இறந்தவா் கூடலூா் எம்.ஜி.ஆா். காலனியைச் சோ்ந்த சின்னாத்தேவா் மகன் சமயன் (28) எனத் தெரிந்தது.

ADVERTISEMENT

தாய் தந்தை இறந்து விட்ட நிலையில், சமயன் கூலி வேலைக்குச் சென்று வந்த அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT