தேனி

நீதிமன்ற ஊழியா் தற்கொலை

4th Jun 2023 11:42 PM

ADVERTISEMENT

தேனியில் மாவட்ட நீதிமன்ற ஊழியா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி அல்லி நகரம், ஒளவையாா் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (33). இவா் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சுகாதார ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி அபிராமி. இவா் குடும்ப பிரச்னையில் கோபித்துக் கொண்டு மதுரை ஆனையூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இதனால், மன வருத்தத்திலிருந்த காா்த்திகேயன் தேனி மீறு சமுத்திரம் கண்மாய் அருகே விஷம் குடித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மயங்கிக் கிடந்தாா். அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அபிராமி அளித்த புகாரின் பேரில், தேனி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT