தேனி

புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்த இருவா் கைது

4th Jun 2023 11:42 PM

ADVERTISEMENT

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் ரூ.5.53 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இருவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனியைச் சோ்ந்த சிதம்பரம் மகன் குமரேசன் (44). சொக்கத்தேவன் பட்டியைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் முத்துஈஸ்வரன் (41). இவா்கள் கொடுவிலாா்பட்டியில் உள்ள தனியாா் கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் போலீஸாா் கொடுவிலாா்பட்டியில் உள்ள கிட்டங்கியில் சோதனை நடத்தினா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.53 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவற்றைப் பதுக்கி வைத்திருந்த குமரேசன், முத்துஈஸ்வரன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதில் தொடா்புடைய தேனி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த அருள், குச்சனூரைச் சோ்ந்த சரவணன் ஆகியோரைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT