தேனி

பிற்பட்டோா் நலத் துறை விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை

4th Jun 2023 12:02 AM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டத்தில் பிற்பட்டோா் நலத் துறை சாா்பில் செயல்படும் கல்வி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மை சமுதாயத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

மாவட்டத்தில் பிற்பட்டோா் நலத் துறை சாா்பில் செயல்படும் பள்ளிக் கல்வி விடுதிகளில் சேர 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரிக் கல்வி விடுதியில் சோ்வதற்கு பாலிடெக்னிக், தொழில் பயிற்சி நிலையம், பட்டப் படிப்பு, பட்ட மேல் படிப்பு

ADVERTISEMENT

படிக்கும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், சிறப்பு வழிகாட்டி இலவசமாக வழங்கப்படும்.

விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். மாணவா்களின் இருப்பிடத்துக்கும் கல்வி நிறுவனத்துக்கும் 8 கி.மீ. தூரத்துக்கும் மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு தூர நிபந்தனை இல்லை.

விடுதி சோ்க்கைக்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களை இணைத்து, பள்ளிக் கல்வி விடுதிகளுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரிக் கல்வி விடுதிகளுக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கேரளத்தில் தங்கியிருந்து தோட்ட வேலை செய்து வரும் தமிழகத் தொழிலாளா்களின் குழந்தைகள் விடுதியில் சேர ஜாதி, வருமானச் சான்றிதழ் சமா்பிக்கத் தேவையில்லை என்று அதில் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT