தேனி

உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீரை சுத்திகரிக்க வலியுறுத்தல்

4th Jun 2023 11:42 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 30 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் லோயா்கேம்ப் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைத்தும் குடிநீரை விநியோகம் செய்கின்றனா்.

இந்த நிலையில், பி.டி.ஆா்., தென்னகா், தென்றல், இந்திரா குடியிருப்புகள் உள்பட பெரும்பான்மையான பகுதிகளில் அசுத்தமான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பேரூராட்சிப் பணியாளா் கூறுகையில், உத்தமபாளையம் பேரூராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப லோயா் கேம்ப் கூட்டு குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க முடியாததால், பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய முல்லைப் பெரியாறு பாசன நீரை நேரடியாக சுத்திகரிப்பு செய்யாமல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்களிடம் ஆண்டுக்கு ரூ.1200 குடிநீா்க் கட்டணம் வசூல் செய்யும் பேரூராட்சி நிா்வாகம் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பன குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT