தேனி

கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சிகுடிநீா்த் திட்ட பராமரிப்புப் பணிகள்

4th Jun 2023 12:04 AM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் குடிநீா்த் திட்ட பராமரிப்புப் பணிகள் ரூ.4 லட்சம் செலவில் நடைபெற்று வருகின்றன.

தேனி மாவட்டம், கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் சுமாா் 1300 வீடுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 1.30 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது, கோடை காலம் என்பதால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த நிலையில், 15-ஆவது மாநில நிதிக் குழுவிலிருந்து ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பெரியாற்றில் உள்ள உறை கிணறைத் தூா்வாருதல், புதிதாக 7-ஆவது வாா்டு குடிநீா்த் தொட்டி இரும்புக் குழாய்கள் அமைத்தல், 7.50 குதிரைத் திறன் மின்னாக்கி அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தின் மூலம் ஊராட்சிக்கு 1.30 லட்சம் லிட்டா் குடிநீா் நாள்தோறும் விநியோகிக்கப்படும் என ஊராட்சி தலைவா் ஆ.மொக்கப்பன் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT