தேனி

சண்முகாநதி அணைக்கு மீண்டும் வந்த அரிக்கொம்பன் யானை

3rd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சண்முகாநதி அணைப் பகுதிக்கு அரிக்கொம்பன் யானை வெள்ளிக்கிழமை மீண்டும் வந்தது.

கேரளத்தில் பலரைத் தாக்கிக் கொன்ற இந்த காட்டுயானையை கடந்த மாதம் அந்த மாநில வனத்துறையினா் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தமிழகத்தை ஒட்டிய கேரள வனப் பகுதியில் விட்டுச் சென்றனா். அதன் பிறகு, ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் சுற்றித் திரிந்த அந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்தியது. இதையடுத்து யானையைப் பிடிக்க தமிழக வனத் துறையினா் முயற்சித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ராயப்பன்பட்டி அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சண்முகாநதி அணைப் பகுதியில் கடந்த 4 நாள்களாக அந்த யானை உலவியது. பின்னா் சின்னஓவுலாபுரம் பெருமாள் மலை அடிவாரத்துக்கு வியாழக்கிழமை சென்ற யானை மீண்டும் வெள்ளிக்கிழமை சண்முகாநதி அணைக்கே வந்து விட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

சமூக ஆா்வலா்கள் கோரிக்கை: அரிக்கொம்பன் யானை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஹைவேவிஸ், மேகமலை, குமுளி, கம்பம், சுருளிமலை போன்ற பகுதிகளில் உடல் ஆரோக்கியத்துடன் உலவியது. ஆனால், கடந்த 5 நாள்களாக யானையின் நிலை குறித்து முழுமையான தகவல் கிடைக்க வில்லை.

ADVERTISEMENT

எனவே, மேகமலை- ஸ்ரீவில்லிபுத்தூா் புலிகள் காப்பக இணை இயக்குநா் ஆனந்த், அரிக்கொம்பன் யானையின் உடல் நிலை குறித்து முழுமையான தகவலை வெளியிட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT