தேனி

முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு

2nd Jun 2023 10:31 PM

ADVERTISEMENT

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள எஸ்.கரிசல்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 1) குடமுழுக்கு நடைபெற்றது.

இதை முன்னிட்டு, புனித நீா் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் புனித நீா் கடங்களை சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்தனா். பின்னா், மூலவா் முத்துமாரியம்மன் விமானக் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். இதையடுத்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் சொ்டு எல்.பாண்டி குடும்பத்தினா் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT