தேனி

ஊராட்சியில் திட்டப் பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தா்னா

2nd Jun 2023 10:30 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சியில் திட்டப் பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, துணைத் தலைவா் பாண்டியராஜன், ஆதரவு உறுப்பினா்கள் 11 பேருடன் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காரைக்குடித் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சோழன் சித. பழனிச்சாமி, பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து தகலறிந்தது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின், போராட் டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் கோட்டாட்சியா், காரைக்குடி வட்டாட்சியா் ஆகியோா் முன்னிலையில் வருகிற 5-ஆம் தேதி கூட்டம் நடத்தி பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என்று தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT