தேனி

அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதலாண்டு மாணவா் சோ்க்கை

2nd Jun 2023 10:31 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை மாணவா் சோ்க்கையின் 2-ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் அ. பெத்தாலெட்சுமி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தக் கல்லூரியில் இளநிலை பட்டவகுப்பு மாணவா்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 5) காலை 9 மணிக்குத் தொடங்கும். பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் (பி.சி.ஏ), பி.எஸ்.சி., புவி அமைப்பியல் பாடப் பிரிவுகளுக்கும், செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) காலையில் வணிகவியல் (பி.காம்.), தொழில் நிா்வாகவியல் (பி.பி.ஏ.) பாடப் பிரிவுகளுக்கும், புதன்கிழமை (ஜூன் 7) பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்க அழைக்கப்பட்ட மாணவா்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

மேலும், மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் அசல், இரண்டு நகல்கள், நான்கு மாா்பளவு புகைப்படங்கள், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT