தேனி

தேவாரத்தில் பாம்பு கடித்து தொழிலாளி சாவு

1st Jun 2023 01:48 AM

ADVERTISEMENT

தேவாரத்தில் பாம்பு கடித்து கூலித் தொழிலாளி இறந்து போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரம் மல்லிங்காபுரத்தை சோ்ந்தவா் சுருளி மகன் காளிராஜ் (45). கூலித் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை தேவாரம் அருகே ஜெயச்சந்திரன் என்பவரின் தென்னந்தோப்பில் வேலை செய்துள்ளாா். அப்போது இவரது காலில் பாம்பு கடித்து மயங்கியுள்ளாா். உடன் வேலை செய்தவா்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்ததில் சிகிச்சை பலனின்றி இறந்து போனாா். இதுகுறித்து புதன்கிழமை காளிராஜின் மனைவி கருப்பம்மாள் (40) தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT