தேனி

சுருளி அருவியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

1st Jun 2023 10:36 PM

ADVERTISEMENT

சுருளி அருவியில் ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா்.

தேனி மாவட்டம், சுருளி அருவியின் நுழைவாயிலில் நாராயணத்தேவன்பட்டி ஊராட்சிக்குச் சொந்தமான சுமாா் 40 சென்ட் காலி இடம் உள்ளது. பிரதான சாலையில் இருந்த இந்த இடத்தை பலா் ஆக்கிரமித்து கடைகள், கோயில்கள் கட்டி இருந்தனா். இவற்றை அகற்றக் கோரி, நாராயணத்தேவன்பட்டி பொதுமக்கள் சாா்பில், உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறையினா் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை புதன்கிழமை தொடங்கினா்.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT