தேனி

கஞ்சா கடத்தல் வழக்கு:இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

1st Jun 2023 01:46 AM

ADVERTISEMENT

தேனியில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பெரியகுளத்தைச் சோ்ந்த சின்னராஜா மகன் பிரபாகரன் (22), சுருளிமணி மகன் ராம்குமாா் (25) ஆகியோரை கஞ்சா கடத்தியதாக கடந்த 2022-ஆம் ஆண்டு அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். மேலும் இவா்களிடமிருந்து 21 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், குற்றஞ்சாட்டப்பட்ட பிரபாகரன், ராம்குமாா் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT