தேனியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா செவ்வாய்கிழமை வழங்கினாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசு தனியாா் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற்றது.
கட்டுரைப் போட்டியில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், ஸ்ரீரங்கபுரம் எஸ்.ஆா்.ஜி.அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி ரெ.அஸ்விதா முதலிடம் பெற்றாா். ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் மு.மோகன்பாபு 2-ஆம் இடம், சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரா.ஜனனி 3-ஆம் இடம் பெற்றனா்.
பேச்சுப் போட்டியில் மொத்தம் 55 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் ப ள்ளி மாணவி மா.காயத்திரி, தே.கல்லுப்பட்டி புனித பீட்டா் மேல்நிலைப் பள்ளி மாணவி சே.அப்ராபானு, வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ம.ரூபிகா ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7,000, 3-ஆம் பரிசு ரூ.5,000 பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வழங்கினாா். மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ உடனிருந்தாா்.