தேனி

கல்லூரிப் பேராசிரியா் வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

DIN

போடியில் பாலிடெக்னிக் கல்லூரிப் பேராசிரியா் வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனியில் வசிப்பவா் மனோகா் மனைவி பிரேமா (43). இவா் கோட்டூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது வீட்டில் போடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மனைவி வசந்தா (55) வீட்டு வேலை செய்து வந்தாா்.

கடந்த மாதம் பிரேமா தனது ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை படுக்கையில் தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டாா். திரும்பி வந்து பாா்த்தபோது தங்கச் சங்கிலியை காணவில்லை.

இதுகுறித்து பிரேமா போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், தங்கச் சங்கிலியை வசந்தா திருடியது தெரியவந்தது. இதையடுத்து வசந்தா மீது வழக்குப் பதிவு செய்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT