தேனி

திமுக செயற்குழு கூட்டம்

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் நகர வடக்கு திமுக செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நகரச் செயலாளா் எம்.சி.வீரபாண்டியன் தலைமை வகித்தாா். அவைத்தலைவா் அப்துல் ரகீம் முன்னிலை வகித்தாா். நகர துணை செயலாளா் கராத்தே ராமகிருஷ்ணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் ரூ. 1 கோடியில் கம்பராயப் பெருமாள் காசி விசுவநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் தலைமையில் ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தீா்மானங்களை மாவட்ட திமுக துணைச்செயலாளா் குரு.இளங்கோ வழிமொழிந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT