தேனி

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: ஆட்சியரிடம் கோரிக்கை

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், அய்யம்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகிற மாா்ச் 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அய்யம்பட்டி கிராமக் குழு நிா்வாகிகள், ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் அளித்த மனு விவரம்: சின்னமனூா் அருகேயுள்ள அய்யம்பட்டியில் ஏழைகாத்தம்மன், வல்லடிகாரசுவாமி கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கிராமக் குழு சாா்பில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகிற மாா்ச் 12-ஆம் தேதி ஜல்லிக் கட்டுப் போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT