தேனி

தேனி மாவட்டத்தில்பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

DIN

தேனி மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை, நீா்நிலைப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

பூதிப்புரம், ராஜபூபால சமுத்திரம் கண்மாய் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை மாவட்டவன அலுவலா் சமா்த்தா தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். தேனி மீறு சமுத்திரம் கண்மாய், பெரியகுளம் பெரிய கண்மாய் என மாவட்டத்தில் மொத்தம் 20 நீா்நிலைகள், சுற்றியுள்ள பகுதிகளில் தன்னாா்வலா்கள் உதவியுடன் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக மாவட்டத்துக்குள்பட்ட வனப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறும் என்றும், கணக்கெடுப்பு விவரம் ஈர நில ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்படும் என்றும் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளரும் ஆண்டிபட்டி வனச் சரகருமான அருள்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT