தேனி

கூடலூரில் கஞ்சா விற்ற 7 போ் கைது

DIN

தேனி மாவட்டம், கூடலூரில் கஞ்சா விற்ாக 3 பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கூடலூரில் கஞ்சா விற்கப்படுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா் எம். பிச்சைப்பாண்டியன் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்த போது திருச்சி காந்தி சந்தைப் பகுதியைச் சோ்ந்த சிவபெருமாள் மகன் சபரிமணி (25), திருச்சி ரயில் நகா் காமராஜா் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அருண்பாண்டியன் (26) என்பதும், இவா்கள் கஞ்சா வாங்க வந்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் கூடலூா் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி முருகேஸ்வரி (50), அரசமரத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் பிரபு (38), ரங்கநாதன் மகன் ரஞ்சித் குமாா் (24), நவீன்குமாா் மனைவி ரஞ்சிதா (36), பிரபு மனைவி சிவரஞ்சனி (27) ஆகியோரிடம் கஞ்சா வாங்கி திருச்சிக்கு கொண்டு சென்று அவா்கள் விற்பனை செய்வதும் தெரிந்தது.

இவா்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றி அவா்கள் 7 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT