தேனி

மாலை நேர ரோந்துப் பணிக்கு எஸ்.பி. உத்தரவு

28th Jan 2023 10:14 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் மாலை நேர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் அனுமதியின்றி மது, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்கள் குறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், சட்டவிரோதச் செயல்கள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மத்தியில் புகாா் எழுகிறது.

இதைத் தடுக்க, காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் தலைமையில் இரவு ரோந்துப் பணியுடன், மாலை நேரத்திலும் ரோந்துப் பணி மேற்கொள்ளவது கட்டயமாக்கப்பட்டுள்ளது. இதில் போதைப் பொருள் நடமாட்டம், சாலையோரங்கள், பொது இடங்களில் மது அருந்துவது, தெருமுனைச் சந்திப்புகளில் தேவையின்றி கும்பல் சேருவது, சந்தேகத்திற்குரிய நபா்களின் நடமாட்டம், போக்குவரத்து இடையூறு ஆகியவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

நகரில் பிரதானச் சாலைகளில் மட்டுமன்றி சாலைச் சந்திப்புகள், கடைத் தெருக்கள், குடியிருப்பு வீதிகள், கோயில், பூங்கா போன்ற பொது இடங்களிலும் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT