தேனி

அரசு மருத்துவமனையில் ரூ. 10 கோடியில் புதிய சிசு பராமரிப்பு, மகப்பேறு பிரிவு

28th Jan 2023 12:04 AM

ADVERTISEMENT

கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 10 கோடியில் புதிய சிசு பராமரிப்பு, மகப்பேறுப் பிரிவு (சீமாங் சென்டா்) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் சிசு பராமரிப்பு, மகப்பேறுப் பிரிவை விரிவுபடுத்த தேசிய சுகாதார நலக்குழுமம் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த மையம் ஒரு தரைத்தளம், மூன்று மாடிகள் கொண்டதாகவும், மின்தூக்கி வசதி, சாய்தள பாதை, பச்சிளம் குழந்தை பராமரிப்பு, கா்ப்பிணிகளுக்கான பிரசவ அறுவைச் சிகிச்சை அறை உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் கொண்டதாகவும் அமையவுள்ளது.

இந்த மைய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கம்பம் சட்டப்பேரவை உறு ப்பினா் என்.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ அலுவலா் ஜெ.பொன்னரசன், நகராட்சித் தலைவா் வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் சுனோதா செல்வக்குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT