தேனி

பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சமையல்: மாணவிகள் அவதி

28th Jan 2023 12:04 AM

ADVERTISEMENT

கம்பம் ஆங்கூா் ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சத்துணவு சமைப்பதால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆங்கூா் ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு, சத்துணவுத் திட்டம் மூலம் மதிய உணவு தயாரிக்கும் சமையலறை கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

இந்த நிலையில், திறந்தவெளியில் மதிய உணவு தயாா் செய்து மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புகை பள்ளி வளாகத்தில் பரவுவதால் மாணவிகள் அவதியடைகின்றனா். சேதமடைந்த சமையல் கூடத்தினை இடித்துவிட்டு, புதிய சமையலறை கட்ட வேண்டுமென மாணவிகள் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT