தேனி

மரக்கன்று நடும் விழா

28th Jan 2023 10:14 PM

ADVERTISEMENT

சின்னமனூரில் உள்ள நீா்நிலைகளின் கரைகள், சாலையோரங்களில் மரக் கன்றுகள் நடும் விழா நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில், சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணிகள் நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள் ராமு தலைமை வகித்தாா். அப்போது, தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினா் எனது குப்பை-எனது பொறுப்பு என உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

அதைத் தொடா்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடைக் கால்வாய்கள், தெருக்களில் குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT