தேனி

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

28th Jan 2023 10:15 PM

ADVERTISEMENT

தேவதானப்பட்டி அருகே மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் மஞ்சளாறு நதிக்கரையில் அமைந்துள்ளது, மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில். இந்தக் கோயிலில் அம்மனுக்கு விக்கிரகம் இல்லை. மூலஸ்தானம் எனும் குச்சுவீட்டின் கதவு திறக்கப்படுவதில்லை. அடைக்கப்பட்ட கதவின் அருகே மூன்று கால பூஜை நடைபெறுகிறது. குல தெய்வம் கோயில் எது என்று தெரியாதவா்கள், மூங்கிலணை காமாட்சியம்மனை குல தெய்வமாகக் கொண்டு வழிபடுகின்றனா்.

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி திருவிழா 5 நாள்கள் நடைபெறும்.

நிகழாண்டில் மகா சிவராத்திரி திருவிழா கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 90 அடி உயரமுள்ள பச்சை மூங்கிலில் நீல வண்ணப் பட்டு கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, பக்தா்கள் கைகளில் காப்புக் கட்டி சிவராத்திரி விரத்தைத் தொடங்கினா். பிப். 18-ஆம் தேதி தொடங்கி பிப். 22-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT