தேனி

சூரியகாந்தி விதைகள் வழங்கும் விழா

28th Jan 2023 12:05 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சாா்பில் பெண் விவசாயிகளுக்கு விலையில்லா சூரியகாந்தி விதைகள் வழங்கப்பட்டன.

சின்னமனூா் அருகே சங்கராபுரம், புலிக்குத்தியில் நடைபெற்ற விழாவுக்கு இந்த மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்தாா். முன்னதாக திட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஸ்வரன் வரவேற்றாா்.

வேளாண்மைப் பல்கலைக் கழகத்தினால் வெளியிட்ட உயர்ரக சூரியகாந்தி விதைகளை 50 பெண் விவசாயிகளுக்கு வழங்கினா். புலிக்குத்தி ஊராட்சித் தலைவா் சுப்புராஜ், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். சபரிநாதன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT