தேனி

போடியில் குப்பைகளை அகற்ற ரூ. 4.69 கோடி:நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

DIN

போடியில் குப்பைகளை அகற்ற ரூ. 4.69 கோடி செலவிட அனுமதி வழங்கி நகா்மன்றக் கூட்டத்தில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

போடி நகா்மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவா் ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி (பொறுப்பு) ஆணையா் இ. செல்வராணி, துணைத் தலைவா் கிருஷ்ணவேணி பச்சையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போடி நகராட்சியில் 33 வாா்டுகளில் குப்பைகளை அகற்ற தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கும் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியாா் நிறுவனம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தினமும் போடி நகரில் சேகரிக்கப்படும் 26.36 டன் குப்பைகளை அகற்ற ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரத்து 83 பைசா செலவாகும். அதன்படி ஒரு நாளைக்கு குப்பைகளை அகற்ற மொத்த செலவு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். ஓராண்டுக்கு ரூ.3 கோடியே 94 லட்சத்து 20 ஆயிரம். ஜி.எஸ்.டி. வரி சோ்த்து ஓராண்டுக்கு ரூ. 4 கோடியே 69 லட்சத்து 9 ஆயிரம் என மதிப்பிடப்பட்டு இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்யவும் அனுமதி வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதே போல, போடி வ.உ.சி. நகா் கிழக்குப் பகுதியில் உள்ள ஒழுகால் பாதை தெருக்களை ஒருங்கிணைத்து சுதேசி நகா் என பெயரிடும் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT