தேனி

தேனியில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஊா்வலம்

DIN

தேனியில் விவசாயிகள் விரோதப் போக்கை கடைபிடிப்பதாக மத்திய அரசைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.

தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஊா்வலத்தில், விவசாயிகள் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் கே. ராஜப்பன், சிஐடியு மாவட்டச் செயலா் எம். ராமச்சந்திரன், சிபிஐ விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் திருமலைக்கொழுந்து, பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மத்திய அரசு விவசாயிகள் விரோதப் போக்கை கைவிட வேண்டும். வேளாண்மை விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும். சிறு, குறு நடுத்தர விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மின் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 60 வயது பூா்த்தியடைந்த அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியகுளம் சாலை, மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை ஊா்வலம் நடைபெற்றது.

விவசாயிகள் டிராக்டா்கள், இருசக்கர வாகனங்களிலும், நடந்து சென்றும் ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT