தேனி

தேவாரத்தில் ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தேவாரத்தில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராஜா பிரகாஷ் (34). இவா், தேவாரம் டாஸ்மாக் கடை அருகே தகராறில் ஈடுபட்ட முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் மதன், ராஜாங்கம் மகன் ராஜபிரபு ஆகியோரை தட்டிக் கேட்டாா். இதில் இருவரும் சோ்ந்து ராஜா பிரகாசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து ராஜா பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT