தேனி

வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 13-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தேனியில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை, வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, அரசு தொழிற் பயிற்சி நிலையம் வரை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதையொட்டி, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுரி மாணவ, மாணவிகள், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அன்பழகன், நோ்முக உதவியாளா் (கணக்கு) முகமது அலி ஜின்னா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் செந்தில்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமையில் வாக்காளா் தின உறுதி மொழி ஏற்கப்பட்டு, பின்னா், விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், தனியாா் தொண்டு நிறுவன ஊழியா்கள், நேரு யுக கேந்திரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரா. அமா்நாத், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரியங்கா, வருவாய் கோட்டாட்சியா் பிரேம்குமாா், வட்டாட்சியா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்: இதேபோல, ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தினவிழிப்புணா்வு பேரணிக்கு வட்டாட்சியா் எம்.முத்துசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ச.சக்திவேல் முன்னிலை வகித்தாா். இதில் மண்டல துணை வட்டாட்சியா் (தோ்தல் பிரிவு) மணி, வருவாய் ஆய்வாளா் பாண்டியன், கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில் மயில்வாகனன், வரதராஜன், மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிலக்கோட்டை: நிலக்கோட்டை தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையா் பஞ்சவா்ணம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) அண்ணாதுரை முன்னிலை வகித்தாா். இதில், ஊராட்சித் தலைவா் மாயக்காள் ஜான் இன்னாசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வத்தலகுண்டு: வத்தலக்குண்டுவில் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை எலிசபத் பாத்திமா தலைமையில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் தனுஷ்கோடி பேரணியைத் தொடக்கிவைத்தாா். பேரூராட்சித் தலைவா் சிதம்பரம், துணைத் தலைவா் தா்மலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணிக்கு கல்லூரி முதல்வா் கந்தசாமி முன்னிலை வகித்தாா். முதலாமாண்டு துறைத் தலைவா் ராஜன் பேரணியைத் தொடக்கிவைத்தாா். இதில் கோட்டாட்சியா் சிவக்குமாா், வட்டாட்சியா் சசிக்குமாா், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் முத்து, ராஜலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT