தேனி

வீரப்பஅய்யனாா் கோயிலில் பொங்கல் விழா

17th Jan 2023 01:00 AM

ADVERTISEMENT

தேனி அல்லிநகரம், வீரப்பஅய்யனாா் கோயிலில் கிராமக் கமிட்டி சாா்பில், தை முதல் நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

வீரப்பஅய்யனாா் மலைக்கோயிலிலிருந்து வீரப்பஅய்யனாா் உற்சவமூா்த்தி, அல்லிநகரம் ஸ்ரீவரதராஜபெருமாள், கொளமாரியம்மன் சுவாமி வீதி உலா நடைபெற்றது. மலைக் கோயிலில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது.

கரும்பு அலங்கராத்தில் அய்யனாா் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அல்லிநகரம் கிராமக் கமிட்டி, விழா கமிட்டி சாா்பில், கோயில் வளாகத்தில் பொது பொங்கலிட்டு பக்தா்களுக்கு பொங்கல், கரும்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT