தேனி அருகே திங்கள்கிழமை, வீட்டில் மின் விளக்கை மாற்றும் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
அமச்சியாபுரத்தைச் சோ்ந்த செளந்தரபாண்டி மகன் வேல்முருகன் (23). இவா், வீட்டில் பழுதடைந்த மின் விளக்கை மாற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட வேல்முருகன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து வேல்முருகனின் சகோதரா் வெற்றிச்செல்வன் அளித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.