தேனி

பென்னிகுயிக் பிறந்த நாள் விழா

17th Jan 2023 02:50 AM

ADVERTISEMENT

போடி பாலாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பென்னிகுவிக் பிறந்த நாள் விழாவை அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேய பொறியாளா் கா்னல் பென்னிகுயிக் கட்டினாா். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் அவரது பிறந்த தினமான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையின்போது தேனி மாவட்டத்தில் பென்னிகுயிக் பொங்கலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு, 182ஆவது பிறந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தேனி மாவட்டம் பாலாா்பட்டியில் நடைபெற்ற விழாவில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பென்னிகுயிக் பேரவை நிா்வாகி ஆண்டி தலைமையில், கிராமத்தில் ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், பெண்கள் பென்னிகுயிக் மண்டபம் முன் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். தங்கள் நிலங்களில் முதன் முதலில் அறுவடை செய்த பயிா்களை படைத்து வழிபட்டனா்.

விழாவில், தேவராட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ADVERTISEMENT

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்திலுள்ள கா்னல் ஜான் பென்னிக்குயிக் சிலைக்கு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT